AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Copra

Biggest Copra Sale News At Perundurai | பெருந்துறை கொப்பரை ஏலம் 05-09-2026

Biggest Copra Sale News At Perundurai | பெருந்துறை கொப்பரை ஏலம் 05-09-2026

• ஈரோடு மாவட்டம் கே 914 பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று 05-09-2026 சனிக்கிழமை வழக்கம்போல் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் தரத்தின் அடிப்படையில் மறைமுக ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. இன்றைய ஏலத்தில் அன்சல்பர் தேங்காய் பருப்பு முதல் தரம் 366 மூட்டைகளும், இரண்டாம் தரம் 594 மூட்டைகளும், சல்பர் தேங்காய் பருப்பு முதல் தரம் 2,599 மூட்டைகளும், இரண்டாம் தரம் 2,962 மூட்டைகளும் என மொத்தம் 6,521 மூட்டைகள் வரத்து வந்தன. அன்சல்பர் கொப்பரை முதல் தரம் கிலோ ரூ.158.99 முதல் ரூ.166.96 வரையும், இரண்டாம் தரம் ரூ.154.60 முதல் ரூ.162.80 வரையும் விற்பனையானது. சல்பர் போட்ட கொப்பரை முதல் தரம் கிலோ ரூ.152.60 முதல் ரூ.165.60 வரையும், இரண்டாம் தரம் ரூ.36.99 முதல் ரூ.153.99 வரையும் விலை பெற்றது. இன்றைய ஏலத்தில் மொத்தம் 304 டன் தேங்காய் பருப்பு சுமார் ரூ.4 கோடியே 71 லட்சம் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் தேங்காய் பருப்பு வியாபாரிகள் கவனிக்க வேண்டியது, இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிலவரம் பெருந்துறை ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்ட விளைபொருட்களுக்கு நடைபெற்ற ஏலத்தின் அடிப்படையிலானது மட்டுமே; வெளிச்சந்தை, தோட்டம் அல்லது பிற இடங்களில் நடைபெறும் நேரடி விற்பனை மற்றும் கொள்முதலுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தாது. மேலும் தினசரி விவசாய சந்தை விலை, வரத்து மற்றும் ஏல நிலவரங்களை அறிந்துகொள்ள AQSE Group YouTube சேனலை Subscribe செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy